உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஏழு ஆண்டுகளாக கிடைக்கப் பெறாத நீதியானது மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமானதாக அமையும்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
33 பார்வைகள்

ஒரு கொடூரமான, இரக்கமற்ற, தங்களுடைய சுயலாபங்களுக்காக இந்த மக்கள் இந்த நாட்டிலே பலியிடப்பட்டிருக்கின்றார்கள் என்ற செய்தி மிக மிக மோசமானதும், கேவலமானதும் ஆகும். இந்த விடயத்திலே நீதி நிலைநாட்டப்படுகின்ற பொழுதுதான் எதிர்கால சந்ததியினர் நம்பிக்கையோடு இந்த நாட்டிலே பயணிக்க முடியும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத் தெரிவித்தார்.

அரசியல், இன, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு மனிதாபிமான ரீதி என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மட்டக்களப்பு இருதயபுரம் சேமக்காலையில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஏழு ஆண்டுகளாகக் கிடைக்கப் பெறாத அல்லது தாமதிக்கப்பட்ட நீதியானது, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமானதாக அமையும். ஆகவே, இந்த விடயத்தில் மிக முக்கியமாக, மிக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசிற்கு இருக்கிறது. அரசு இதற்கான செயல்பாடுகளை ஆரம்பித்திருந்தாலும் கூட, அதற்கான கால எல்லையை நிர்ணயித்து ஒவ்வொரு ஈஸ்டர் தினத்திற்கும் அந்தத் தீர்மானங்கள் அல்லது குற்றவாளிகள் கண்டறியப்படுவதாகச் சொல்லப்பட்டாலும், ஏழு ஆண்டுகளாக அந்த உறவுகளுக்கு அந்த நீதி கிடைக்கவில்லை.

உண்மையிலே, இது அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு மனிதாபிமான ரீதியாக நோக்குகின்ற பொழுது, அந்தச் சிறுவர்கள் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு கனவுகளோடு பயணித்திருந்தவர்கள், ஒரு மத வழிபாட்டுக்குச் சென்ற இடத்திலே துடிதுடித்து இறந்து போனார்கள். நானும் அந்த வைத்திய செயல்பாடுகளில் இருந்தபோது, காயப்பட்ட எத்தனையோ கடுமையான துன்பங்களை அனுபவித்தவர்களைக் கண்டிருந்தேன்.

ஆகவே, இந்த ஒரு மனிதாபிமானமற்ற ஒரு கொடூரமான செயலுக்காகத் தண்டனை கொடுக்கப்படுவதோடு, நீதி நிலைநாட்டப்படுகின்ற பொழுதுதான் எதிர்காலத்தில் இவ்வாறான மனிதாபிமானமற்ற, அரசியலுக்காகச் செயல்படுகின்ற இந்த நிகழ்ச்சித் திட்டங்கள் நிறுத்தப்படும்.

குற்றவாளிகள் தண்டிக்கப்படும் போதுதான் எதிர்காலத்திலே ஒரு நேர்மையாக நடக்க வேண்டும் என்ற சிந்தனை உருவாகும்.

ஆகவே, இந்த விடயத்திலே சம்பந்தப்பட்ட அனைவரும் விசாரிக்கப்பட்டு மிக விரைவாகக் குற்றவாளிகள் அடையாளங்காணப்பட்டு, இந்த நீதி நிலைநாட்டப்பட்டு, இந்த மக்களுக்கான ஒரு நீதி வழங்கப்பட வேண்டும் என்று நான் இந்த அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றேன்.

உண்மையிலேயே மிக முக்கியமான விடயம், இந்த நீதி தாமதிக்கப்படுகின்ற போது மக்களிடத்திலே நம்பிக்கையீனம் ஏற்படும். இதற்காக நேர்மையாகப் பயணித்தவர்கள் எல்லாம் பல இடங்களிலே பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அப்பாவிகள் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிற சந்தர்ப்பங்கள், அவர்கள் குற்றவாளிகளாக்கப்படுகிற சந்தர்ப்பங்கள், பல திசைதிருப்பல்கள் கடந்த காலங்களிலே இடம்பெற்றிருக்கின்றது.

இவ்வாறான நிகழ்ச்சி நிரல் மாற்றப்பட்டு நீதியாக இந்த மக்களுக்கான நியாயம் இந்த நாட்டிலே கிடைக்க வேண்டும். அதற்கான செயல்பாட்டினை இந்த அரசாங்கம் விரைந்து எடுக்க வேண்டும். உண்மையான செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, இன்னும் விரைவாக, இன்னும் நியாயமாக அவை வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, குற்றவாளிகளுக்கு எந்தவித தயவு தாட்சண்யமுமின்றியும் அவர்களுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று இந்த உறவினர்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த உயிர்த்த ஞாயிறு தினத்திலே உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் இதயபூர்வமான அஞ்சலிகளையும் செலுத்திக்கொண்டு, உண்மையிலே இந்த மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்கள் ஒரு சமய வழிபாட்டுக்காக இறைவனைப் பிரார்த்திப்பதற்குச் சென்ற வேளை ஒரு கொடூரமான, இரக்கமற்ற, தங்களுடைய சுயலாபங்களுக்காக இந்த மக்கள் இந்த நாட்டிலே பலியிடப்பட்டிருக்கின்றார்கள் என்ற செய்தி மிக மிக மோசமானதும் கேவலமானதும் ஆகும்.

ஆகவே, இந்த விடயத்திலே நீதி நிலைநாட்டப்படுகின்ற பொழுதுதான் எதிர்கால சந்ததியினர் நம்பிக்கையோடு இந்த நாட்டிலே பயணிக்க முடியும். ஆகவே, இது அரசியல், இன மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு மனிதாபிமான ரீதி என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

67 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

80 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

52 0 0