உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
40 பார்வைகள்

நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி அதிகார சபையில் (DVTC) நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு நேற்று செவ்வாய்க்கிழமை (21) சமூக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி அதிகார சபையில் அங்கு பயிற்சி நெறியினை மேற்கொள்ளும் பயிலுனர்களுக்கு நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் பொறுப்பதிகாரி எஸ்.அப்துல் நாஸர் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது அம்பாறை மாவட்ட செயலகத்தின் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் பாவனையாளர் உரிமைகள், பொறுப்புகள், சட்டங்கள், பாதுகாப்பு மற்றும் பொருட்கள் சேவைகளின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் மற்றும் தற்போதைய சந்தையில் பொருட்களின் அரசாங்க கட்டுப்பாட்டு விலை மற்றும் அதிகார சபையின் சட்டதிட்டங்கள் முறைப்பாடு செய்வது சம்மந்தமாக பயிலுனர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இவ் விழிப்புணர்வு நிகழ்சிக்கு பிரதான வளவாளராக அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரி இஷட்.எம் ஸாஜீத் மற்றும் ஏ.பீ.எம் றிப்சாத் ஆகியோருடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

67 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

80 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

52 0 0