உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பிள்ளையான் மீதானகுற்றச்சாட்டுகளில்உண்மையில்லை!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
37 பார்வைகள்

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில் எவ்வித சான்றுகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை” என்று கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விதம் மற்றும் அவருக்கு எதிரான விசாரணைகள் குறித்து ஊடகங்களிடம் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“பிள்ளையான் கைது செய்யப்பட்ட போது, அவரிடமிருந்து மிக முக்கியமான தகவல்கள் கிடைக்கப் பெற்று வருகின்றன என்று ஜனாதிபதியும் பிரதி அமைச்சரும் தெரிவித்திருந்தனர். ஆனால், ஓராண்டுக்குப் பிறகு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்த ‘பி’ அறிக்கையில், தாக்குதலுக்கும் பிள்ளையானுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக எந்தவொரு விடயமும் குறிப்பிடப்படவில்லை.” – என்றார்.

மட்டக்களப்புச் சிறையில் இருந்தபோது சஹ்ரான் குழுவினருடன் பிள்ளையான் தொடர்புகளை ஏற்படுத்தினார் என்று அஸாத் மௌலானா முன்வைத்த குற்றச்சாட்டுகள், தற்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ ஆவணங்களில் ஏன் இடம்பெறவில்லை என்றும் தேரர் கேள்வி எழுப்பினார்.

அரசியல் இலாபங்களுக்காகவும் ஒரு தரப்பினரைத் திருப்திப்படுத்தவும் இத்தகைய கருத்துக்கள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டது என்று சாடிய அவர், அவை உண்மைக்கு அப்பாற்பட்டவை என்பது இப்போது நீதிமன்ற அறிக்கைகள் ஊடாகப் புலனாகத் தொடங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.

முறையான ஆதாரங்கள் இன்றி ஒருவரைக் குற்றவாளியாகச் சித்தரிப்பது விசாரணைகளின் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றது என்றும் ஞானசார தேரர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

66 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0