உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஈஸ்டர் தாக்குதலுக்கு கட்டாயம் நீதி வேண்டும்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
41 பார்வைகள்

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தார்மீக ஆதரவை வழங்குவதோடு, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உள்ளிட்ட அதியுச்ச தண்டனை பெற்றுக்கொடுக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோம்” என்று அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தக் கொடூர செயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த அவர், தாக்குதலின் பின்னாலுள்ள உண்மை கண்டறியப்படாமல் இருப்பது நாட்டுக்கே தோல்வி என்று சுட்டிக்காட்டினார். உண்மையான குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த அரசு தவறினாலும், அதற்காகப் போராடும் ஏனைய தரப்புகளுடன் இணைந்து நிற்கத் தமது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

தற்போதைய அரசின் செயற்பாடுகள் குறித்தும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார்.

“அரசு ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்துக்கு மேலாகியும், தமிழ் மக்களுக்கு வழங்கிய எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

ஜனாதிபதி செய்ய முடிந்த காரியங்களைச் செய்ய வேண்டும், முடியாதவற்றை முடியாது என்று மக்களிடம் வெளிப்படையாகக் கூற வேண்டும்.” – என்றார் அவர்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“நாட்டைப் பிரிக்காமல் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த முடியும் என்பதே எமது நிலைப்பாடு. அதற்காக நாம் முன்வைக்கும் சமஷ்டி கோரிக்கையை ஒருபோதும் கைவிடப்போவதில்லை. இந்தியாவுடனான பேச்சுகளின் போதும் எமது இந்த நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளோம்.” – என்றார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு அச்சப்படுவதாகச் சாடிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஒற்றையாட்சி முறைமையின் கீழ் அதிகாரத்தைப் பகிர்ந்து வழங்க அரசு தயாராக இல்லை என்றும் குறிப்பிட்டார்.

மாகாண ஆளுநர்களைக் கொண்டு முன்னெடுக்கப்படும் தற்போதைய செயற்பாடுகள் இதனை உறுதிப்படுத்துவதாகவும், மாகாண சபை முறைமையின் ஊடாகத் தமிழ் மக்கள் எதனையும் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் தனது ஊடகச் சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

66 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0