உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

“யுத்த வீரர்” என்ற பெயரில் குற்றவாளிகள் தப்ப முடியாது.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
53 பார்வைகள்

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள சக்திகளை வெளிப்படுத்துவது மக்களின் அடிப்படை உரிமை. யுத்த வீரர் என்ற லேபிளுக்குப் பின்னால் மறைந்து கொண்டு எவரும் சட்டத்திலிருந்து தப்பிக்க இடமளிக்கக் கூடாது” என்று கொழும்பு மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இன்று காலை 8:45 மணியளவில் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து விசேட அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகின. கர்தினால் ஆண்டகையுடன் இணைந்து கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர், இந்து மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் எனப் பலரும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

கர்தினால் ஆண்டகை தமது உரையின் போது பல முக்கிய விடயங்களைத் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகச் சில நபர்களைப் பாதுகாப்பதற்கு பாதுகாப்புப் பிரிவினர் முயன்றதாகக் குற்றம் சாட்டிய அவர், அரச புலனாய்வுச் சேவையின் நடவடிக்கைகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரின் செயற்பாடுகள் குறித்துப் பலத்த சந்தேகங்களையும் வெளியிட்டார்.

தாக்குதல் தொடர்பான சில முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளமை குறித்துத் தனது அதிருப்தியை வெளியிட்ட கர்தினால், முந்தைய ஆணைக்குழு அறிக்கைகளின் உண்மைத்தன்மை மீள ஆராயப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கடந்த கால அரசுகள் தமக்குச் சாதகமான விசாரணைகளையே முன்னெடுத்த போதிலும், தற்போதைய அரசு இந்த விவகாரத்தில் ஒரு சாதகமான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உண்மை மறைக்கப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை எனத் தற்போதைய ஜனாதிபதி உறுதியளித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் ஆண்டகை, சட்டமும் நீதியும் அனைவருக்கும் சமமாக நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு என்றும் தனது உரையில் மேலும் கூறினார்.

நினைவேந்தலை முன்னிட்டு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தைச் சூழ இன்றும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

66 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0