உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

குடு சலிந்துவின் நெருங்கிய சகாக்கள் கைது.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
47 பார்வைகள்

பாதாள உலகக் குழுத் தலைவனும், பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான “பாணந்துறை குடு சலிந்து” என அழைக்கப்படும் சலிந்து மல்ஷித்தவின் நெருங்கிய சகாக்கள் இருவர் பாயாகலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் “பெத்தா” (பெதும்) என்ற புனை பெயருடனும் “கவிய” (கவிந்து) என்ற புனை பெயருடனும் அழைக்கப்படுபவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

வலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, செவ்வாய்க்கிழமை (21) அதிகாலை பாயாகலையின் நிர்மலவத்தை மற்றும் கும்புருகொட ஆகிய பகுதிகளில் விசேட சோதனைகள் நடத்தப்பட்ட போதே இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட “பெத்தா” என்பவரிடமிருந்து 42,350 மி.கி. ஐஸ் போதைப்பொருளும் “கவிய” என்பவரிடமிருந்து 48,170 மி.கி ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த இருவரும் பயாகலை பகுதியில் தலைமறைவாகியிருந்து அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களுக்குத் திட்டமிட்ட முறையில் போதைப்பொருட்களை விநியோகம் செய்து வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாலன ஊழல் தடுப்புப் பிரிவினரும் பயாகலை பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

66 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0