உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அஸ்வெசும உதவிகள் சரியான நபர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
47 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அஸ்வெசும முன்னேற்ற கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அஸ்வசும இணைப்பாளர் கே.விமலநாதன் பங்குபற்றுதலுடன் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (21) இடம்பெற்றது.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலக வாரியான முன்னேற்றம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், அரச செயற்திட்டங்களை வினைத்திறனாக செயற்படுத்த வேண்டும் என்பதுடன் அஸ்வெசும உதவிகள் சரியான நபர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதுடன் பிழையான நபர்களுக்கு வழங்காதிருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இதன் போது மக்களின் நலன்புரி வேலைத்திட்டமான அஸ்வெசும வேலைத்திட்டத்தை வினைத்திறனாக முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள், சவால்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

மேலும், அஸ்வெசும பயனாளிகளுக்கு தேவையான விடயங்களை உரிய முறையில் கவனம் செலுத்தி அவர்களின் தரவுகளை துரித கதியில் இற்றைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டன.

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்கள், தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் திருமதி.கே.லக்சிகா, நலன்புரி நன்மைகள் பிரிவு உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

66 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0