உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அரசின் முறையற்ற நிர்வாகத்தால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்கு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
37 பார்வைகள்

“அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தால் நாட்டின் மின்சக்தித் துறை மற்றும் பொருளாதாரம் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

எதுல்கோட்டேயிலுள்ள அக்கட்சியின் பிரதான காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற மோசடி மற்றும் தாமதங்கள் காரணமாக, இந்த ஆண்டு மின் உற்பத்தி 50 சதவீதத்தால் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளது.

ஒரு அலகு நீர் மின்சாரத்துக்கு 3 ரூபாவும், நிலக்கரிக்கு 23 ரூபாவும் செலவாகும் நிலையில், தட்டுப்பாட்டை நிவர்த்திக்க 80 ரூபா செலவில் டீசல் மின்சாரத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

390 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவையை வழங்காமல், அந்த நிதியை டீசல் கொள்வனவுக்குப் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளமையானது அரசாங்கத்தின் திவால் நிலையை உறுதிப்படுத்துகின்றது.” – என்றார்.

அரசாங்கத்தின் அமைச்சர்களுடைய வங்கிக் கணக்குகள் அதிகரித்துள்ள போதிலும், நாட்டின் அபிவிருத்தி ஸ்தம்பிதமடைந்துள்ளது என்று சாடிய அவர், வரவு – செலவுத் திட்ட நிதியில் வெறும் 30 சதவீதத்தை மாத்திரமே அரசாங்கம் செலவிட்டுள்ளமை அதன் இயலாமையைக் காட்டுகின்றது என்றார்.

அத்துடன், இந்தியாவுடன் இரகசியமான முறையில் 7 உடன்படிக்கைகளை மேற்கொண்டு தரவுகளைப் பகிர முற்படுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் அவர் எச்சரித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளில் இருந்து விடுபட அரசாங்கம் வழிதேட வேண்டும் என்று வலியுறுத்திய சுஜீவ சேனசிங்க, நாட்டைச் சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய அனுபவம் வாய்ந்த குழு சஜித் பிரேமதாஸவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே உள்ளது என்றும் தெரிவித்தார்.

அனைத்து எதிர்க்கட்சிகளும் மக்கள் நலனுக்காக ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுவென்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0