உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
29 பார்வைகள்

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் 2026 ஆம் ஆண்டிற்கான புதுவருட சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் பொலிஸ் நிலைய திறந்த வெளியரங்கில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வானது கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் ஆலோசனைக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி தலைமையில் இந் நிகழ்வுகள் நடைபெற்றது.

குறித்த நிகழ்வு சமூகப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிட் நெறிப்படுத்தலில் நடைபெற்றதுடன் கல்முனை தலைமையக பொலிஸ் ஆலோசனைக் குழுவின் பொதுச் செயலாளர் எம்.ஐ .எம் ஜிப்ரி(எல்.எல்.பி) உள்ளிட்ட பொலிஸ் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றியீட்டியவர்களுக்கு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி அவர்களினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் இராப்போசன ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0