உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ராஜபக்ஷக்களின் காலம் முடிந்துவிட்டது; செய்த தவறுகளுக்கு பதிலளிக்கவே அவர்கள் தயாராக வேண்டும்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
36 பார்வைகள்

“பொருளாதாரத்தைச் சீரழித்த ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றப்போவதாகச் சூளுரைக்கின்றமை வேடிக்கையானது” – என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வின் பின்னர் கருத்துத் தெரிவித்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, “பொருளாதாரச் சுமையால் மக்களிடம் புத்தாண்டு உற்சாகம் இம்முறை இல்லை. மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றப் பாரிய திட்டத்துடன் களம் இறங்குவோம்” என்று குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழல் குறித்து மஹிந்த ராஜபக்ஷ கவலை வெளியிட்டிருப்பது வேடிக்கையானது. நாட்டைத் வங்குரோத்து நிலைக்குத் தள்ளி, மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியவர்களே ராஜபக்ஷக்கள்தான். பொருளாதாரச் சுமை குறித்துப் பேசுவதற்கு அவர்களுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது.

பாரிய திட்டத்துடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம் எனக் கூறுவது பகற்கனவு காண்பதற்குச் சமனாகும். மக்கள் அவர்களை ஏற்கனவே நிராகரித்துவிட்டார்கள். இப்போது அவர்கள் கவலைப்பட வேண்டியது மீண்டும் அதிகாரத்துக்கு வருவது பற்றி அல்ல, கடந்த காலங்களில் மக்கள் சொத்துக்களைச் சூறையாடியமை மற்றும் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகளுக்குச் சட்டத்தின் முன் எவ்வாறு பதிலளிக்கப் போகிறோம் என்பது குறித்துத்தான்.” – என்றார்.

புதிய ஆண்டில் அரசியல் மாற்றம் ஏற்படும் என மஹிந்த ராஜபக்ஷ கூறியிருப்பதை வழிமொழிந்த அமைச்சர், “நிச்சயமாக அரசியல் மாற்றம் ஏற்படும். ஆனால் அது அவர்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்காக அல்ல மாறாக, அவர்கள் உருவாக்கிய ஊழல் கலாச்சாரத்தை முற்றாக ஒழித்து, முறையான ஜனநாயகத்தை நிலைநாட்டவே அந்த மாற்றம் அமையும். ராஜபக்ஷக்களின் அரசியல் சகாப்தம் இலங்கையில் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை அவர்கள் உணர வேண்டும்” என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0