உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஊழல் குற்றச்சாட்டு; முன்னாள் அமைச்சர் பிணையில் விடுவிப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
22 பார்வைகள்

அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஊழல் புரிந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவைக் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அவையாவன:-
0* சட்டவிரோத நியமனங்கள்: 2015ஆம் ஆண்டு திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராகப் பணியாற்றிய போது, உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாது காலி மாவட்டத்தைச் சேர்ந்த தனது அரசியல் ஆதரவாளர்கள் 134 பேரைத் தொழில்நுட்பக் கல்வித் திணைக்களத்தில் சிற்றூழியர்களாக நியமித்தமை.

  • அதிகார துஷ்பிரயோகம்: ஒழுக்காற்று காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி பணிப்பாளர் என். யோகராஜாவின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தமை.

இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான், முன்னாள் அமைச்சரைத் தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.

சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டதுடன் வழக்கின் சாட்சியாளர்களுக்கு எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கக் கூடாது என்று அவர் கடுமையாக எச்சரிக்கப்பட்டார்.

இந்த வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கை மற்றும் ஏனைய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு நீதிவான் இதன்போது உத்தரவிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0