உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஏறாவூர் பிரதேசத்தில் பாடசாலை உபகரணங்களும் ,பெண்களின் தொழில் முன்னேற்றத்திற்கான நிதி உதவிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
38 பார்வைகள்

இன்றைய காலகட்டம் மாணவர்களுக்கு ஒரு சவால்நிறைந்த காலகட்டமாக மாறியுள்ளதாகவும் அதில் அவர்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆ.சுதாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வறிய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் குடும்பங்களை தலைமைதாங்கும் பெண்களின் தொழில் முன்னேற்றத்திற்கான நிதி உதவிகளும் இன்று மாலை வழங்கிவைக்கப்பட்டன.

சமூகங்களை இணைத்தல் அமைதியை கட்டி எழுப்புதல் – மட்டக்களப்பில் இளைஞர் மற்றும் மகளிர் தலைமைத்துவத்தின் மூலம் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாப்பையும் பலப்படுத்துதல்” என்ற திட்டத்தின் கீழ் சர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டிலும் யுனோப்ஸ் மற்றும் விரித்தி அமைப்பின் பங்களிப்பிலும் இவை வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி பகுதி மாணவிகளுக்கும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள தமிழ்-முஸ்லிம் குடும்பங்கள் தலைமை தாங்கும் பெண்களுக்குமான உதவிகள் வழங்கப்பட்டன.

இதன்போது 38 மாணவிளுக்கு பாடசாலை உபகரணங்களும் 16 குடும்பங்கள் தலைமை தாங்கும் பெண்களுக்கு தொழில் முன்னேற்றத்திற்கான நிதி உதவிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

சர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின் பணிப்பாளர் அஜானி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் அ.சுதாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் சிறுவர் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பாடசாலை அதிபர் என பலர் கலந்துகொண்டனர்.

தமிழ்-முஸ்லிம் மக்களிடையே இன ஒற்றுமையினை ஏற்படுத்தும் வகையிலும் அமைதியான முறையில் ஒற்றுமையுடன் வாழும் சமூகத்தினை கட்டியெழுப்பும் வகையிலும் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

இதன்போது உரையாற்றிய உதவி திட்டமிடல் பணிப்பாளர்,

இது சவால் நிறைந்த உலகம். ஆகவே, இந்த நாட்டை அல்லது இந்த பிரதேசத்தை வழிப்படுத்தப்பட வேண்டியவர்கள், வழிப்படுத்த எதிர்காலத்தில் நிக்கிற முக்கிய தூண்கள் நீங்க.

உங்களுக்குத் தெரியும் பெண் பிள்ளைகள், இப்ப இருக்கிற பொருளாதாரச் சுமை, இப்ப இருக்கிற காலச் சூழல், இலத்திரனியல் யுகம் போன்ற பற்பல சவால்களுக்கு மத்தியில நீங்க உங்கட படிப்பைக் கொண்டு உங்கட இலக்கை நோக்கி முன்னேற வேண்டிய கடப்பாடுகள் உங்களுக்கு இருக்கு. நீங்க ஒரு கண்ணாடிப் போத்தல் மாதிரி. இந்தக் கண்ணாடிப் போத்தல் உடையாம இருக்கிற வரைக்கும் தான் அந்த கண்ணாடிப் போத்தலுக்கான பெறுமதி இருக்கு.

ஆகவே நீங்க உங்கட இலக்கை அடைஞ்சு, இந்தச் சமூகத்தில உங்கட தாய் தகப்பனுக்கு ஒரு நிலையான ஒரு மதிப்பை பெற்றுக்கொடுக்கணும் என்று நான் இந்த இடத்தில கேட்டுக்கொள்றேன். நீங்க படிக்கிற இடம் வந்து உண்மையா உங்களுக்குத் தெரியும், ஒரு காலத்தில கழுவன்கேணி என்ற இடம், ஒரு கிராமம் மிகப்பெரிய விளம்பரம் பெற்றது. ஆனால் இன்று நாங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளதற்கு என்ன காரணம் என்று தெரியாது. ஆனால் எல்லா வசதி வாய்ப்புகளும் இருக்கின்றது, ஆனால் நாங்க பின்தங்குறோம். காரணத்தை நீங்க அறிந்து அதில் முன்னுக்கு வரவேண்டும்.

இந்த உலகத்துல அன்னை தெரேசாவ எடுத்தா, யாரென்றே தெரியாத ஒருவராகயிருந்து இந்த உலக நாடுகளுக்கு வழிகாட்டினவர். அதுபோன்று நீங்களும் இந்த பிரதேசத்துல இருந்து வந்து, இந்த மாவட்டத்தை அல்லது இந்த பிரதேசத்தை, இந்த நாட்டை நிர்வகிக்கிற ஆட்களா நீங்க முன்னுக்கு வரணும் என்று நான் உங்கள்ட்ட கேட்டுக்கொள்றேன். மிகக் கவனம், சவால் நிறைந்த உலகம். நிறைய சவால்களை எதிர்கொண்டு தான் நீங்க முன்னுக்கு வரணும்.

ஒரு தாய் தன்னோட பிள்ளை ஒரு உயர்ந்த இடத்தில நிக்கக்குள்ள வர்ற ஆனந்தக் கண்ணீர் தான், நீங்க தாய்மாருக்கு, தகப்பனுக்குக் கொடுக்கக்கூடிய உங்கட வாழ்க்கையில மிகப்பெரிய கொடை. ஆகவே அந்தக் கொடையைக் கொடுக்கணும் என்று நான் நினைக்கிறேன். அந்த அடிப்படையில நல்லொழுக்கம் மிக்க மாணவர்களா, எதிர்கால சமூகத்துல உங்கட பாடசாலைக்கு பேரெடுத்துக் கொடுக்கக்கூடிய ஒரு பிள்ளைகளா நீங்க எதிர்காலத்துல வளரணும் என்று இந்த இடத்துல எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டிக்கொள்கிறேன். நீங்க வருவீங்க என்று நான் மனப்பூர்வமா நம்புறேன்.

அதேபோன்று இன்னைக்கு உங்களுக்குத் தர்ற இந்த பொதிகள் யாரோ ஒருவரால அல்லது உலகத்துல எங்கிருந்தோ ஒரு மூலையில இருந்து ஒரு ஆள் பங்களிப்பு செய்ததால நீங்க நன்மை அடையிற மாதிரி, எதிர்காலத்துல நீங்க வாங்குற கையா இருக்கக்கூடாது, நீங்கள் கொடுக்குற கையா மாறணும் என்று இந்த இடத்துல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். ஆகவே மிகக் கவனமாகவும், நிதானமாகவும் நீங்க நடந்து கொள்ளணும்.”

“இந்த பிரதேசத்துல இன்னொரு பிரச்சனை உங்களுக்குத் தெரியும், இந்த சவால் நிறைந்த உலகம் என்று சொன்னது, இன்று போதைப்பொருள் பாவனை இந்த நாட்டுல மிகப்பெரிய பாரிய ஒரு சவாலா இருக்கின்றது. நேற்று கூட இலங்கையில கிட்டத்தட்ட 40 கோடி பெறுமதியான போதைப்பொருள் பிடிக்கப்பட்டது.

தயவுசெய்து நீங்கள் கவனமாக இருங்கவேண்டும். யாரையும் நம்பி என்னத்தையும் வாங்கிச் சாப்பிட்றாதீங்க. உங்கட குடும்பம், உங்கட பிள்ளைகள் ஒரு நல்வழி கொண்டு வர்றதுக்கு யோசிங்க. சில விஷயங்கள் திடீரென்று பணக்காரனாக முடியும் ஆனா அதோட விளைவு வந்து பின்னுக்கு வரக்குள்ள மிகவும் பாரதூரமா இருக்கும். இன்னைக்கு நாங்க செய்திப் பத்திரிகையில எல்லாத்துலயும் பார்க்கிறோம், இலங்கைக் கடலைச் சுட்டி போதைப்பொருள் தான் பிடிபடுது. யார் பாவிக்கிறான் என்று கேட்டா அதான் பிரச்சனையா இருக்கு. என்ட குடும்பத்தையும் என்ட பிள்ளைகளையும் நான் பாதுகாப்பா வைக்கல என்று சொன்னால் என்ட குடும்பம் இந்த நாட்டுல இருந்து பிரயோஜனம் இல்லை.

உங்களுக்குத் தெரியும் அரசாங்கமும் கடும் முயற்சி இதுல எடுத்துக்கொண்டு இருக்கு. அதிமேதகு ஜனாதிபதியும் இந்த விஷயத்துல மிகக் கவனமா இருக்கார். ஆனா ஏதோ ஒரு வழியில ஏதோ ஒரு சக்திக்கு ஊடாக எங்கட நாட்டுக்கு இது வருது. எங்கட வீட்டப் பாதுகாத்தால் தான் இந்தப் பிரதேசத்தைப் பாதுகாக்க, எங்கட கிராமத்தைப் பாதுகாக்க முடியும். இந்தக் கிராமம் பாதுகாக்கப்பட்டால் தான் பிரதேசம் பாதுகாக்கப்படும், இந்தப் பிரதேசம் பாதுகாக்கப்பட்டால் தான் இந்த மாவட்டம் பாதுகாக்கப்படும்.

ஏதாவது உங்கட நண்பர்கள்ல அல்லது உங்கட சக தோழிகள்ல ஏதாவது மாற்றங்கள் கண்டால் அந்த மாற்றம் சரியான முறையில பெற்றோருக்கு அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீங்க தெரிவிச்சுக்கொள்ளணும். ஏன்னா காலம் மிகச் சவாலான காலம். அதேபோல நான் நினைக்கிறேன் இங்க வாழ்வாதார உபகரணங்கள் கொடுக்கிறதுக்கு பேரண்ட்ஸ் வந்திருப்பீங்க, மற்றவர்கள் வந்திருப்பீங்க. தயவுசெய்து இந்த உபகரணங்கள் இலவசமா கிடைக்குது என்றதுக்காக பாவிக்க இயலாது நாம. இது ஒரு ஆள் வேர்வை சிந்தி உழைச்ச காசு.

எங்கட குடும்பம் இனிமேல் கையேந்தக்கூடாது என்ற நிலைக்கு நீங்க எல்லாரும் வரணும். அந்த ஒரு மாற்றத்தை இந்தப் பிரதேசத்துல காணணும் என்று நாங்க விரும்புறோம். நாங்க உங்களுக்காக, உங்கட வரிப்பணத்துல சம்பளம் பெறுற உத்தியோகத்தர்கள். எந்த நேரமும் நீங்க எங்கட அலுவலகத்துக்கு வரலாம், திறந்திருக்கு. ஏதாவது பிரச்சனை என்றாலும் நீங்க நேரடியாக வாங்க கதைக்கலாம். காரணம் இது எங்கட சமூகம், எங்கட பிரதேசம், எங்கட மாவட்டம். ஆகவே இதுக்கு வேலை செய்றதுக்கு நாங்க தயாராக இருக்கோம்.

குற்றம் யாரோ ஒரு உத்தியோகத்தர் செய்தாலும் கைநீட்டிக் காட்டுங்க. இது குற்றம் என்று காட்டுங்க, அதை ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம் உத்தியோகத்தர்களுக்கு வரணும். அதேபோல பொதுமக்கள் நியாயமான குற்றத்தைச் சுட்டிக்காட்டணும். அதுக்காக தேவையில்லாம முகநூல்கள்ல எழுதுறது அல்லது அப்படி வரக்கூடாது.”

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0