உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஆறு நாடுகளின் புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளிப்பு..!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
32 பார்வைகள்

இலங்கைக்காகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்.

ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளித்த தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களின் விவரங்கள் வருமாறு

* பப்புவா நியூ கினியா: உயர்ஸ்தானிகர் வின்சென்ட் சுமேல் (புதுடில்லியைத் தளமாகக் கொண்டவர்).
* சோமாலியா: தூதுவர் அப்துல்லாஹி முகமது ஒடோவா (புதுடில்லியைத் தளமாகக் கொண்டவர்).
* லக்சம்பர்க்: தூதுவர் கிறிஸ்டியன் பீவர் (புதுடில்லியைத் தளமாகக் கொண்டவர்).
* வத்திக்கான்: அப்போஸ்தலிக்க தூதுவர் மொன்சிஞ்ஞோர் ஆண்ட்ரே ஜோஸ்வோவிக்.
* பாகிஸ்தான்: உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) நய்யார் நசீர்.
* குவைத்: தூதுவர் சலே முபாரக் அல்-சரவி.

நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்ததைத் தொடர்ந்து, புதிய இராஜதந்திரிகளுடன் ஜனாதிபதி சுமுகமான முறையில் கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0