உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இளைஞரின் போராட்டத்தைச் சுட்டிக்காட்டி சுமந்திரன் இந்தியத் துணை ஜனாதிபதிக்கு இன்று அவசர கடிதம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
36 பார்வைகள்

இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளின் மீள் வருகை மற்றும் அது தொடர்பான நடைமுறைகளைத் துரிதப்படுத்துமாறு கோரி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணனுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஊடாக இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“நேற்று எம்முடன் கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்கித் தந்தமைக்காகவும், அந்தச் சந்திப்பின் போது இலங்கைக்குத் திரும்பி வரவிருக்கும் தமிழ் அகதிகள் தொடர்பாகத் தாங்கள் வெளியிட்ட ஆக்கபூர்வமான கருத்துக்களுக்காகவும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இக்கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள காணொளிச் செய்தியில் உள்ளவாறு, இலங்கைக்குத் திரும்ப விரும்பும் இளைஞர் ஒருவர் நேற்று முன்னெடுத்த போராட்டம் தொடர்பில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

நாம் ஏற்கனவே பேசிக்கொண்டதற்கிணங்க, மேற்படி இளைஞரின் மீள் வருகைக்காக இந்திய அரசின் தரப்பில் செய்யப்பட வேண்டிய விடயங்களைத் துரிதமாக நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்க வேண்டும்.

அதேவேளையில், இவரைப் போலத் தாயகம் திரும்ப விரும்பும் ஏனைய அகதிகளுக்கும் தங்களது அரசுத் தரப்பிலிருந்து செய்யப்பட வேண்டிய நடைமுறைகளைத் துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0