உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் இந்தியத் துணை ஜனாதிபதி!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
33 பார்வைகள்

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், இன்று நுவரெலியாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர் தனது பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார்.

இன்று காலை நுவரெலியா, சீதா எலிய பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சீதை அம்மன் ஆலயத்துக்கு விஜயம் செய்த துணை ஜனாதிபதி, அங்கு விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய இந்த ஆலயம், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான ஆழமான கலாசார மற்றும் நாகரிகத் தொடர்புகளின் அடையாளமாகத் திகழ்வதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நுவரெலியா – ராகலை பகுதியில் இந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் மலையக மக்களுக்கான இந்திய வீட்டுத் திட்டப் பணிகளை அவர் நேரில் சென்று பார்வையிட்டார். அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடிய அவர், வீடுகளின் நிர்மாணப் பணிகள் மற்றும் மக்களின் தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார்.

நேற்று இலங்கை வந்தடைந்த இந்தியத் துணை ஜனாதிபதி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்களையும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மலையகக் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து முக்கியப் பேச்சுகளை நடத்தியிருந்தார்.

தனது இரண்டு நாள் முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தை இன்று மதியத்துடன் நிறைவு செய்துகொண்டு அவர் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0