உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

விபத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
34 பார்வைகள்

தம்புத்தேகம – குருநாகல் பிரதான வீதியின் மெல்சிறிபுர, தஸ்ஹிந்த பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) மதியம் இடம்பெற்ற கார் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தம்புத்தேகம நோக்கிப் பயணித்த கார் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நின்றிருந்த ஐவர் மீது மோதியதுடன், அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரின் பின் பகுதியிலும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வீதியோரத்தில் நின்றிருந்த இரு ஆண்கள், இரு பெண்கள் மற்றும் ஒரு சிறுமி என ஐவர் காயமடைந்ததுடன், விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதியும் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பெற்றுவந்த 74 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த ஏனையவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மெல்சிறிபுர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0