உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கட்டுத்துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
38 பார்வைகள்

புத்தளம் – ஆனமடுவ பரமாகந்த லுனுவெவ சரணாலயத்தில் கட்டுத்துவக்கில் சிக்கி ஒரு பிள்ளையின் தந்தை துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் பரமாகந்த முகவரியில் வசிக்கும் 40 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான தினேஷ் என கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட நபர் லுனுவெவவிற்கு சென்று மீன் பிடித்து விட்டு திரும்பும் போது, இரவு ஏரி சரணாலயத்தின் ஊடாக பயணித்துக் கொண்டிருந்த வேளை, அப்பகுதியில் வனவிலங்குகளை இலக்கு வைத்து கட்டியிருந்த கட்டுத்துவக்கில் சிக்கி, அந்த இடத்திலேயே பலத்த காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சரணாலயத்திற்குள் புதர் வழியாக குனிந்து சென்று கொண்டிருந்தபோது, கட்டுத்துவக்கு வெடித்துள்ளதாகவும், வயிற்றை ஊடுருவிச் சென்று துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபரின் மனைவி அவரை விட்டு பிரிந்து வெளிநாடு சென்றுள்ளதாகவும், அதிகமாக இவர் மது அருந்துதல் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆனமடுவ பொலிஸாரால் பல சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், வனவிலங்குகளை இலக்கு வைத்து கட்டுத்துவக்கு அமைத்திருந்த நபரை ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

64 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

76 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0