உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இந்திய துணை ஜனாதிபதியுடன் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
37 பார்வைகள்

மாகாண சபைத் தேர்தலை மேலும் காலம் தாழ்த்தாமல் நடத்தும்படி நேற்றுக் காலையில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவைத் தாம் நேரில் சந்தித்துப் பேசிய போது கேட்டுக்கொண்டார் என இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கின்றார்.

நேற்றுப் பிற்பகல் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் ஏழு பேரை சந்தித்த சமயமே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சாணக்கியன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரே இந்தியத் துணை ஜனாதிபதியைத் தமிழ்த் தேசியக் கட்சிகளின் சார்பில் சந்தித்துப் பேசினர்.

இலங்கையின் இனப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றே நியாயமானதாகவும், நின்று, நிலைத்து, நீடிக்க கூடியதாகவும் இருக்கும் என்பதை தமிழர் தரப்பு பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத் தமிழ் அகதிகள் நாடு திரும்ப விரும்பினால் அதற்கு ஏற்ப பொருத்தமான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து தமிழ்த் தலைவர்களோடு இந்தியத் துணை ஜனாதிபதி விரிவாக ஆராய்ந்தார்.

இந்திய உதவித் திட்டத்தின் கீழ் இலங்கையில் குறிப்பாக தமிழர் தாயகப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் அவர் ஆராய்ந்தார்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் நடைமுறையாக்கம் பற்றிய விவகாரங்கள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்தாய்வு செய்தனர்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்குத் தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றமை குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் விசனம் தெரிவித்தனர்.

அது குறித்து முற்பகலில் இலங்கை ஜனாதிபதியோடு தான் நடத்திய பேச்சின் போது தான் நேரடியாக வலியுறுத்தினார் என்று இந்தியத் துணை ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எனினும், இந்தியத் துணை ஜனாதிபதியின் இந்த வலியுறுத்தலுக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ எந்தப் பிரதிபலிப்பையும் இலங்கை ஜனாதிபதியோ அல்லது இலங்கைத் தரப்புப் பிரதிநிதிகளோ அந்தச் சந்திப்பில் வெளிப்படுத்தவில்லை என்றும் அறியவந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

64 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

76 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0