உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சந்தன கத்திரியாரச்சியை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
41 பார்வைகள்

ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் கைவசம் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாரச்சியை 30 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய பாதுகாப்பு அமைச்சரிடமிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது.

ஏற்கனவே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாரச்சி கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் விசாரணை அதிகாரிகள், அந்தப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக லொக்குஹெட்டியிடமிருந்து பெற்றுக்கொண்ட தடுப்புக்காவல் உத்தரவுக்கு அமைய, 72 மணிநேரம் தடுப்புக்காவலில் வைத்து அவரிடம் விசாரணைகளை நடத்தியிருந்தனர்.

இந்நிலையிலேயே ஞாயிற்றுக்கிழமை (19) அவரை மேலும் 30 நாட்கள் தப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சரின் கையொப்பத்துடன் அனுமதி பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அலுவலகம் தெரிவித்தது.

கடந்த வியாழக்கிழமை(16) சந்தன கத்திரியாரச்சி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் இலக்கம் 5 விசாரணை அறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்குக் கிடைத்த தொலைபேசி அழைப்பொன்றில், பிலியந்தலை பகுதி வீடொன்றில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் இலக்கம் 5 விசாரணை அறை அதிகாரிகள், கெஸ்பேவ நீதிவான் நீதிமன்றத்தில் விசேட சோதனை அனுமதியைப் பெற்று குறித்த வீட்டைச் சோதனை செய்திருந்தனர். இரண்டு மாடிகளைக் கொண்ட சந்தன கத்திரியாரச்சியினுடைய குறித்த வீட்டின் முன் மற்றும் பின்பக்க அறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கைக்குண்டு மற்றும் பல்வேறு ரகத் தோட்டாக்களும் நான்கு துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டிருந்தன.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே, ஞாயிற்றுக்கிழமை (19) அவரை 30 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தன கத்திரியாரச்சியிடம் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

64 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

76 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0