உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மன்னாரில் மத சுதந்திரம் மற்றும் நல்லிணக்கம் குறித்த செயலமர்வு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
33 பார்வைகள்

​நவீன உலகில் பன்முகத்தன்மை கொண்ட சமூகங்களுக்கிடையே பரஸ்பர மரியாதையையும், சமய சுதந்திரத்தையும் வலியுறுத்தும் நோக்கில் விசேட செயலமர்வு ஒன்று நேற்று மன்னாரில் இடம்பெற்றது.

​NCEASL (National Christian Evangelical Alliance of Sri Lanka) நிறுவனத்தின் அனுசரனையுடன், கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் (RDF) மன்னார் கிளை காரியாலயத்தின் ஏற்பாட்டில் கிராம அபிவிருத்தி நிறுவன பயிற்சி வளாகத்தில் இவ் நிகழ்வு இடம்பெற்றது.

​”மதம் அல்லது நம்பிக்கை மற்றும் மத சுதந்திரம்” எனும் கருப்பொருளில் நடைபெற்ற இச் செயலமர்வில், மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட பல்லினம் சார்ந்த 35 இளைஞர் மற்றும் யுவதிகள் கலந்துகொண்டனர்.

பல்வேறு மதப் பின்னணிகளைக் கொண்ட இளைஞர், யுவதிகள் சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது குறித்து விரிவாகக் கலந்துரையாடுவதற்கான பல்வேறு குழு செயற்பாடுகளும் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் இலகுபடுத்துனர்களாக கலந்துகொண்ட அப்ரஜ் மர்சூக் மற்றும் மாதங்கி உதயபாலன் ஆகியோர் மத நல்லிணக்கம் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து தெளிவான விளக்கங்களை வழங்கினர்.

குறிப்பாக மத அடையாளங்களை மதித்தல், பிறரது நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் ஏற்படும் சமூகப் பாதிப்புகள் மற்றும் அவை தனிநபர்களை எவ்வாறு மனதளவில் காயப்படுத்துகின்றன என்பது பற்றி கலந்துரையாடப்பட்டது. அதே நேரம் இலங்கையின் அரசியலமைப்பில் மத சுதந்திரம் மற்றும் மத உரிமைகள் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட ரீதியான விடயங்கள் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

64 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

76 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0