உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இந்திய உப ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
41 பார்வைகள்

இலங்கைக்குத் தனது முதலாவது உத்தியோகபூர்வ இருதரப்பு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய உப ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணனுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தல் மற்றும் பொருளாதாரத் தொடர்புகளை வலுப்படுத்துவது குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக, இரு தேசங்களுக்கும் பயனளிக்கக்கூடிய நடைமுறை ரீதியான வாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கையும் இந்தியாவும் வெறும் அண்டை நாடுகள் மட்டுமல்ல; பொதுவான வரலாறு, சவால்கள் மற்றும் பொதுவான எதிர்காலத்தைக் கொண்ட உண்மையான கூட்டாளர்கள் என்று இச்சந்திப்பின் போது எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நீண்டகாலக் கூட்டுறவின் பலன்கள் அனைத்துக் குடிமக்களுக்கும் சென்றடையச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதற்காக அதீத அபிலாஷைகள், உறுதியான நோக்கம் மற்றும் நம்பிக்கையுடன் இரு நாடுகளும் இணைந்து முன்னேற வேண்டிய தருணம் தற்போது வந்துள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

64 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

76 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0