உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
40 பார்வைகள்

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 51 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகுதியொன்றைக் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்த சிகரெட் தொகுதியைச் சட்டவிரோதமாகக் கொண்டுவந்து, கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் ‘பசுமை வழி’ ஊடாக வெளியே எடுத்துச் செல்ல முயன்ற வெளிநாட்டுப் பயணி ஒருவரை இன்று (19) அதிகாலை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 36 வயதுடைய பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஒரு வர்த்தகர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர் இன்று அதிகாலை 12.55 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து, தாய் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான TG-307 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளுக்குள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 34,000 சிகரெட்டுகளைக் கொண்ட 170 சிகரெட் கார்ட்டூன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க விசாரணைகளின் பின்னர், குறித்த சிகரெட்டுகள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டதுடன், சந்தேகநபருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

63 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

74 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

27 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0