உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
38 பார்வைகள்

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று சனிக்கிழமை (18) இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாரபுரம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

உயிரிழந்தவர் மன்னார், தாரபுரம் பகுதியைச் சேர்ந்த 01 வயது 06 மாதங்களேயான குழந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பேக்கரி உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த குழந்தை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி – உடுகம வீதியின் படதூவ பகுதியில் உந்துருளி மோதியதில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலி நோக்கி பயணித்த உந்துருளி ஒன்று வீதியை கடக்க முயன்ற பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது விபத்தில் காயமடைந்த பெண் பாதசாரியும் உந்துருளி ஓட்டுநரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி குறித்த பெண் பாதசாரி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் படதூவ, போகஹவத்தை பகுதியை சேர்ந்த 65 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துகள் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

63 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

74 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

27 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0