உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மின் கட்டணத்தில் வரப்போகும் புதிய முறைமை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
24 பார்வைகள்

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை மாற்றியமைக்கும் முறைக்குப் பதிலாக, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கட்டணத்தைத் திருத்தும் புதிய சூத்திரத்தை அறிமுகப்படுத்த எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரியவருகின்றது.

இந்தப் புதிய கட்டணச் சூத்திரத்தை இறுதி செய்வது தொடர்பாக எரிசக்தி அமைச்சும் நிதி அமைச்சும் தற்போது பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.

ஆண்டின் முதல் சில மாதங்கள் வறட்சியாகவும், ஆண்டின் இறுதியில் அதிக மழையும் கிடைப்பதை இந்தப் புதிய முறை கணக்கில் கொள்ளும்.

தற்போதைய முறையில் வறட்சி காலத்தில் கட்டணம் அதிகரிப்பதையும், மழைக்காலத்தில் குறைவதையும் நுகர்வோர் எதிர்கொள்கின்றனர். இந்தநிலையில், புதிய முறையின்படி ஆண்டின் தொடக்கத்தில் ஒருமுறை மட்டுமே கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

இதனால் முதல் ஆறு மாதங்களில் மின்சார சபை நட்டத்தைச் சந்தித்தாலும், ஆண்டின் இரண்டாம் பாதியில் கிடைக்கும் வருவாய் மூலம் அந்த நட்டத்தை ஈடுகட்ட முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், ஒரே மாதிரியான மின்சாரக் கட்டணம் அமுலில் இருப்பதால் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் தங்களது செலவுகளை முன்கூட்டியே திட்டமிட முடியும்.

மின்சாரக் கட்டணம் அடிக்கடி மாறுவதால் பொருட்களின் விலைகளும் அடிக்கடி உயர்கின்றன. ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே கட்டண மாற்றம் செய்யப்படுவதால், சந்தையில் பொருட்களின் விலைகள் குறுகிய காலத்தில் பாரிய அளவில் தளம்பலாவது தவிர்க்கப்படும்.

இந்த நிலையில், குறித்த சூத்திரம் இறுதி செய்யப்பட்ட பின்னர், மின்சாரத் துறை ஒழுங்குமுறை அமைப்பான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

63 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

74 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

27 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0