உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ஏப்ரல் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
33 பார்வைகள்

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனின் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, நாளை ஏப்ரல் 19 ஆம் திகதி மற்றும் நாளை மறுதினம் 20 ஆம் திகதி ஆகிய இரு தினங்களில் கொழும்பு நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துணை ஜனாதிபதி நாளை ஏப்ரல் 19 ஆம் திகதி காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளதுடன், அங்கிருந்து அவர் பிரமுகர் வாகனப் பேரணியில் காலி முகத்திடல் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு வருகை தரவுள்ளார்.

இதற்கமைய, அந்த காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, இந்தியத் துணை ஜனாதிபதி குறித்த ஹோட்டலிலிருந்து ஜனாதிபதி செயலகம் வரை பயணிக்கவுள்ளதால், அப்பகுதியிலும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாளை மறுதினம் 20 ஆம் திகதி இந்தியத் துணை ஜனாதிபதி பயணிக்கும் வீதிகளை அண்டிய பகுதிகளிலும் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

60 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

26 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

49 0 0