கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு.!
வெலிகம, பரணகடே பகுதியில் வெள்ளிக்கிழமை (17) இரவு கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் தனது தாய், தந்தை, இரு சகோதரர்கள் மற்றும் தாயின் மூத்த சகோதரருடன் (மாமனார்) ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
நேற்று இரவு குறித்த இளைஞனுக்கும் அவரது தாயின் மூத்த சகோதரருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில், மாமனார் கூர்மையான ஆயுதத்தால் அந்த இளைஞனைத் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 58 வயதுடைய சந்தேகநபர் (தாயின் சகோதரர்) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகமை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.