உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பொடி பெட்டியை கொ*லை செய்ய முயன்ற சந்தேகநபர் கைது.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
34 பார்வைகள்

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ‘லொகு பெட்டி’ என்பவரின் சகோதரரான ‘பொடி பெட்டி’ என்பவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்ற சந்தேகநபர் ஒருவர், அஹுங்கல்ல பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று வெள்ளிக்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொஸ்கொட, பிடிகொட பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அஹுங்கல்ல, லோகன்வத்த மயானத்திற்கு அருகில் வியாழக்கிழமை (16) முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த ‘பொடி பெட்டி’ என்பவரை சந்தேகநபர் T-56 ரகத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இது தொடர்பாக அஹுங்கல்ல பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், வெள்ளிக்கிழமை (17) இரவு கொஸ்கொட, ஹேகல்ல பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் மறைந்திருந்த போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து 13 கிராம் 760 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

60 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

26 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

49 0 0