உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

குமார ஜயக்கொடி ஊழல் செய்யவில்லை; விசாரணைக்காகவே அவர் பதவி விலகல்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
30 பார்வைகள்

“தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதியில் முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி ஊழல் செய்தார் என்று எந்தவொரு விசாரணையிலும் உறுதிப்படுத்தப்படவில்லை” என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

நிலக்கரி இறக்குமதி விவகாரத்தில் குமார ஜயக்கொடி ஊழல் புரிந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அரச கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை நிராகரித்துள்ளது என்றும் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பொது நிறுவனங்கள் பற்றிய நாடாளுமன்றக் குழு நடத்திய ஆய்வுகளிலும் முறைகேடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“வலுசக்தி அமைச்சுப் பதவியை வகித்திருந்த குமார ஜயக்கொடி மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது கூட, அவர் ஊழல் புரிந்தார் என்று ஆதாரபூர்வமான கருத்துக்கள் எவையும் முன்வைக்கப்படவில்லை. இருப்பினும், இந்த விவகாரத்தில் வெளிப்படையான மற்றும் துரிதமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு வசதியாக, அவர் தனது வலுசக்தி அமைச்சர் பதவியிலிருந்து தாமாகவே முன்வந்து விலகியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஆராய ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணைகளுக்கும், இந்த விசேட ஆணைக்குழுவின் பணிகளுக்கும் இடையே எந்தவித முரண்பாடுகளும் ஏற்படாது.” – என்றார்.

நிலக்கரி இறக்குமதி முறைகேடுகள் குறித்து ஏதேனும் தகவல்கள் இருந்தால், அவற்றை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது அழைப்பு விடுத்தார்.

அமைச்சராக இருந்த ஒருவர், தன் மீதான விசாரணைகள் நேர்மையாக நடப்பதற்காகப் பதவியைத் துறந்திருப்பது பாராட்டுக்குரியது என்று தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத், உண்மை நிலை விரைவில் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

24 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

46 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

72 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

65 0 0