உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை திட்டமிட்டு தடுக்கின்றனர் சில அரசியல் புல்லுருவிகள்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
21 பார்வைகள்

தமிழ் மக்கள் ஒரே குடையின் கீழ் ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை, சில அரசியல் புல்லுருவிகள் தங்களது சுயநல சுகபோகத்துக்காகத் தடுத்து வருகின்றனர் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சாடியுள்ளார்.

மட்டக்களப்பு, துறைநீலாவணையில் நடைபெற்ற ‘யுனைட்டெட்’ விளையாட்டுக் கழகத்தின் சித்திரை விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“தமிழ் மக்களின் நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஓரணியில் இணைந்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும். இதற்காகப் பல்வேறு சிவில் அமைப்புகள் கட்சிகளுடன் தீவிரப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றன. இருப்பினும், சில அரசியல்வாதிகள் தங்களது தனிப்பட்ட அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இவ்வாறான ஒற்றுமை முயற்சிகளைத் திட்டமிட்டுச் சீர்குலைக்கின்றனர்.” – என்றார்.

இதேவேளை, நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பாகவும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

அத்திரைப்படத்தின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதைக் குறிப்பிட்ட அவர், அதில் சித்தரிக்கப்படுவது போலவே நிஜ வாழ்க்கையிலும் சில அரசியல்வாதிகள் மக்களிடையே பிரிவினைவாதத்தை விதைத்து, அதன் மூலம் அரசியல் இலாபம் ஈட்டி வருகின்றனர் என்றும் குற்றம் சுமத்தினார்.

இந்நிகழ்வில் மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மே. வினோராஜ், கிராமப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

63 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

61 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

55 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

49 0 0