உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

திடீரென ஏற்பட்ட தீப்பரவல்; மூன்று வீடுகள் முற்றாக எரிந்து நாசம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
33 பார்வைகள்

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள பம்பரக்கலை PWD நெடுங்குடியிருப்பு பகுதியில் நேற்று வியாழக்கிழமை (16) இரவு ஏற்பட்ட திடீர் தீப்பரவலால் மூன்று வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

இந்த தீப்பரவல் காரணமாக அந்த வீடுகளில் இருந்த பெறுமதியான உடைமைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

தீக்கிரையான மூன்று வீடுகளிலும் இருந்த 12 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீடுகளில் வசிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விபத்தின்போது வீட்டில் இருந்தவர்கள், தீ எரிவதை கண்டு கூச்சலிட்டதாகவும், அதன் பிறகு அயலவர்கள் மற்றும் தகவல் அறிந்து உரிய இடத்துக்குச் சென்ற நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் ஆகியோர் பெரும் முயற்சியெடுத்து தீயை அணைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் நுவரெலியா பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தீயினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று சந்தித்த நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் சுப்பிரமணியம் ஆனந்தராஜ், கிராம சேவகரின் உதவியுடன் மேலதிக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

63 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

62 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

56 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

49 0 0