உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பள்ளத்தில் பாய்ந்த கார்; ஒருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
34 பார்வைகள்

பலாங்கொடையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த கார் ஒன்று, ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் சென் ஜோன் டிலரி பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து கெசல்கமுவ ஓயாவிற்குள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (17) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது சம்பவ இடத்திலேயே ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காரின் சாரதி மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

காயமடைந்த மூவரும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, உயிரிழந்தவரின் சடலம் அதே வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பாகப் பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

62 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

61 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

55 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

49 0 0