உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

முல்லைத்தீவில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் சட்டவிரோத நடவடிக்கையின் போது கைது!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
36 பார்வைகள்

முல்லைத்தீவு, உடுப்புக்குளம் கடற்கரைப் பகுதியில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, இராணுவத்திலிருந்து தப்பியோடி தலைமறைவாக இருந்த நபர் ஒருவரை முல்லைத்தீவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை ஏப்ரல் 15 ஆம் திகதி சுமார் 17:30 மணியளவில், முல்லைத்தீவு – துண்டை, உடுப்புக்குளம் கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வலை இழுக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர் சோதனையிட்டபோது, சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த டிராக்டருடன் குறித்த நபர் பிடிபட்டார்.

இவர் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு இராணுவ சேவையிலிருந்து தப்பியோடியவர் (AWOL) எனத் தெரியவந்துள்ளது.

கடந்த ஒரு வருடமாகத் தலைமறைவாக இருந்த இவர், டிராக்டர் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.

காவல்துறையினர் சுற்றிவளைத்த போது, அங்கிருந்த மற்றொரு நபர் தப்பியோடியுள்ளார்.

குறித்த நபர் சட்டவிரோத வலை இழுக்கும் தொழிலில் நேரடியாகத் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட டிராக்டர் ஆகியவற்றை முல்லைத்தீவு காவல் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தப்பியோடிய மற்றைய நபரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

60 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

59 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

54 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

48 0 0