உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

வெடுக்குநாறிமலை தொடர்பில் சிலர் வண்டுமுருகன் போல் பேசுகின்றனர்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

வெடுக்குநாறிமலை தொடர்பில் சிலர் வண்டுமுருகன் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வெடுக்குநாறிமலையை இந்த அரசாங்கம் சுவீகரிக்கப் போகின்றாரார்களா இல்லையா என்பது தொடர்பில் வெளிப்படையாக கூறவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

“வவுனியா – நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் பௌத்தர்களுக்கு உரியது என புத்தசாசன அமைச்சர் சுனில் செனவி தெரிவித்திருந்தார். எனினும் இதனை அமைச்சர் சந்திரசேகர் மறுத்திருந்தார். இது தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன?” என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
“சிலர் வண்டுமுருகன் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்கள் போல் பதில் பேச முடியாது. ஒரு விடயம் தொடர்பிலே பேசும்போது தெளிவான கருத்துக்களைக் கூற வேண்டும். வெடுக்குநாறிமலையை சுவீகரிக்கப் போவதாக இந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் புத்தசாசன அமைச்சர் தமிழ் மக்களை நோக்கி இனவாத கருத்தை முன்வைத்திருக்கிறார்.

அதனை அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மற்றொரு அமைச்சரான சந்திரசேகர் மறுக்கின்றார். வெடுக்குநாறிமலையை இந்த அரசாங்கம் சுவீகரிக்கப் போகின்றதா இல்லையா என்பது தொடர்பில் வெளிப்படையாக கூறவேண்டும். குருந்தூர் மலையிலும் நீதிமன்ற கட்டளையை மீறி சட்டவிரோதமாக விகாரை கட்டப்பட்டது.

எனவே அமைச்சர்கள் கூறுபவை எல்லாம் இந்த நாட்டில் நடைபெறுகின்றனவா என்பதை அவர்கள் வெளிப்படையாகக் கூற வேண்டும். மக்களிடம் உண்மையைச் சொல்ல வேண்டும். அரசியல் செய்வதற்காக ஏமாற்றுக் கருத்துக்களை கூறக்கூடாது. அவர்களுக்கு மக்கள் விரைவிலே உரிய பதிலை வழங்குவார்கள்” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

60 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

59 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

54 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

48 0 0