உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவினால் 15 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி வைப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
31 பார்வைகள்

நிந்தவூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட “தனக்கான ஓர் இடம் அழகான வாழ்க்கை” எனும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (15) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பிரஜாசக்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான ஆரம்பகட்ட நிகழ்வு அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அரசாங்கத்தால் நிந்தவூர் பிரதேச செயலக பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட 15 வீடுகளுக்கான அடிக்கல் நடும் இந்நிகழ்வில், நிந்தவூர் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான தோழர் சம்சுன் அலி, இப்திகார், அம்பாறை மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், பிரதேச செயற்பாட்டாளர்கள், பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ அவர்களின் இணைப்பாளர் தோழர் சத்தார், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா அவர்களின் இணைப்புச் செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் உட்பட பிரஜாசக்தி தவிசாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

51 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

39 0 0
இலங்கை செய்திகள்

அநுர ஓர் அதிசயம்; தமிழ் தலைவர்கள் தரகர்கள்.!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29) கொழும்பில் ஊடகங்களுக்குக்…

32 0 0