உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலன்னொருவ பகுதியில் நேற்று புதன்கிழமை(15) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடா ஆகியவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பண்டாரகம, வல்கம பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மொரகஹஹேன பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 101 லீற்றர் 250 மில்லிலீற்றர் (135 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபானம் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 1,110 லீற்றர் கோடா (06 பீப்பாய்கள்) என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மொரகஹஹேன பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

51 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

39 0 0
இலங்கை செய்திகள்

அநுர ஓர் அதிசயம்; தமிழ் தலைவர்கள் தரகர்கள்.!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29) கொழும்பில் ஊடகங்களுக்குக்…

32 0 0