உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சந்திரகுமார் அணியோடு சேர்ந்து அரசியலிலே செயற்பட முடியாது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
54 பார்வைகள்

“சந்திரகுமார் அணியோடு இணைந்து அரசியலிலே செயற்பட முடியாது. சிங்களக் கட்சிகளோடு இணைந்து இந்தத் தேசத்தையும் மக்களையும் காட்டிக் கொடுத்து, தமிழ்த் தேசியத்தைச் சிதைத்து, இப்போது தமிழ்த் தேசியம் பேசினால்தான் மக்களுடைய வாக்குகளைக் கவரலாம் என வருபவர்களை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம்.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலயரங்கில் நேற்று இடம்பெற்ற “தையிட்டி அடுத்து என்ன?” எனும் கலந்துரையாடலின் பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஊடகவியலாளர்களின் கேள்வியும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் பதிலும் பின்வருமாறு:-

கேள்வி:- ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில்:- ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் பேச்சுகள் இடம்பெற்று வருவதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன். நல்லது நடந்தால் வரவேற்பேன்.

கேள்வி:- இந்தப் பேச்சுகள் வெற்றி பெற்றால் அந்தக் கூட்டணியில் தொடர்ந்து செயற்படுவீர்களா?

பதில்:- இலங்கைத் தமிழரசுக் கட்சியில் தொடர்ந்தும் நான் அங்கம் வகிக்கின்றேன். என்னை இன்னமும் தமிழரசுக் கட்சியிலிருந்து விலக்கவில்லை. விலக்கினால் சேர்ந்து செயற்படுவதா, இல்லையா என்பது தொடர்பில் முடிவு எடுப்பேன்.

கேள்வி :- ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்குள் இருக்கக்கூடிய பங்காளிக் கட்சிகளை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?

பதில்:- ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய கட்சிகள் ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தவர்கள். எனினும், இதில் அங்கம் வகிக்கக்கூடிய மற்றுமொரு கட்சி சிங்களக் கட்சிகளோடு இணைந்து இந்தத் தேசத்தையும் மக்களையும் காட்டிக் கொடுத்து, தமிழ்த் தேசியத்தைச் சிதைத்து, இப்போது தமிழ்த் தேசியம் பேசினால்தான் மக்களுடைய வாக்குகளைக் கவரலாம் என வருபவர்களை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம். அந்தக் கட்சியோடு இணைந்து எந்தவொரு தேர்தலிலும் பங்குபற்றக் கூடிய சூழ்நிலை கிளிநொச்சியில் இருக்காது. யாழ்ப்பாணத்தில் யாரேனும் சேர்ந்து தேர்தலிலே போட்டியிட்டால் அது அவர்களைப் பொறுத்தது.

சந்திரகுமார் அணியோடு இணைந்து அரசியலிலே செயற்பட முடியாது என்பதை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலும் நான் வெளிப்படையாகக் கூறியிருந்தேன். எங்கள் கட்சியினுடைய தலைவருக்கும் ஏனையவர்களுக்கும் இதனை தெளிவாகக் கூறியிருக்கின்றேன்.

வவுனியாவில் உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சிறீரெலோவோடு இணைந்து செயற்படுவது தொடர்பில் எனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தேன். இவர்களால் தமிழரசுக் கட்சிக்கு ஆபத்து வரும் என்பதையும் எதிர்வு கூறியிருந்தேன். இன்று சிறீரெலோ கட்சியின் தலைவர் எதற்காகக் கைது செய்யப்பட்டிருக்கின்றார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

இதேபோல் சந்திரகுமாரும், இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் எவரும் இறக்கவில்லை, இறந்தவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளே எனக் கிளிநொச்சியில் போராட்டம் நடத்தியவர். பல பாடசாலைகளில் இருந்த அதிபர்களை வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்தவர். தமிழ்த் தேசியத்துக்கு எதிராகவே தனது பயணத்தை மேற்கொண்டவர். இன்று தமிழ்த் தேசியமே கதியென அவர் வந்திருக்கின்றார். இவ்வளவு காலமும் இவர்கள் செய்தது சரியா என்பதை மக்கள் முடிவு எடுக்க வேண்டும்.

கேள்வி:- சந்திரகுமாரோடு இணைந்து செயற்படுவதாக தமிழரசுக் கட்சி முடிவு எடுத்தால் உங்களுடைய நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

பதில்:- சந்திரகுமார் தலைமையிலான கட்சியோடு இணைந்து செயற்படுவதை ஏற்க முடியாது என்ற என்னுடைய கருத்தை மத்திய குழுவிலே தெளிவாகக் கூறியிருக்கின்றேன். மத்திய குழுவிலே எனது எதிர்ப்பு பதிவில் உள்ளது. – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

55 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

48 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

40 0 0
இலங்கை செய்திகள்

அநுர ஓர் அதிசயம்; தமிழ் தலைவர்கள் தரகர்கள்.!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29) கொழும்பில் ஊடகங்களுக்குக்…

33 0 0