உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

யாழில் சிறுமி ஒருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
34 பார்வைகள்

வயிற்றுவலி காரணமாக வாந்தி எடுத்த சிறுமி ஒருவர், வாந்தி சுவாசக் குழாயினுள் சென்றதால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 8 வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

கடந்த 13ஆம் திகதி குறித்த சிறுமிக்கு வயிற்றுவலியுடன் கூடிய வாந்தி ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், நேற்று அதிகாலை ஒரு மணியளவில் மீண்டும் கடும் வயிற்றுவலி ஏற்பட்டு சிறுமி வாந்தி எடுத்துள்ளார்.

நிலைமை மோசமடைந்ததையடுத்து, அதிகாலை 4:30 மணியளவில் சிறுமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், மதியமளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

இதன்போது முன்னெடுக்கப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில் மரணத்திற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது:

சிறுமிக்கு குடல்வளரி (Appendicitis) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட கடும் வயிற்றுவலியின் போது அவர் வாந்தி எடுத்துள்ளார்.

அந்த வாந்தி எதிர்பாராத விதமாகச் சுவாசக் குழாயினுள் (Aspiration) சென்றமையே மரணம் சம்பவிக்கக் காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

53 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

39 0 0
இலங்கை செய்திகள்

அநுர ஓர் அதிசயம்; தமிழ் தலைவர்கள் தரகர்கள்.!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29) கொழும்பில் ஊடகங்களுக்குக்…

32 0 0