உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

நண்பர்களுக்குள் திடீர் மோதல்! தலையில் அடிபட்டு ஒருவர் பலி!! – களுத்துறையில் புத்தாண்டு மதுபான விருந்தில் விபரீதம்

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
36 பார்வைகள்

களுத்துறை, பாயகலை பகுதியில் புத்தாண்டு மதுபான விருந்தின் போது ஏற்பட்ட மோதலில், நபர் ஒருவர் மரப் பலகையால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாயகலை, விஹாரகந்த பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று  செவ்வாய்க்கிழமை இரவு புத்தாண்டு மதுபான விருந்து இடம்பெற்றுள்ளது. இதன்போது அங்கிருந்த நண்பர்களுக்கு இடையே திடீரென ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.

இந்த மோதல் முற்றிய நிலையில், பாயகலை ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள காய்கறி விற்பனை நிலையத்துக்கு  முன்பாக வைத்து மேற்படி நபர் பலமாகத் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த அவர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பாயகலை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய  நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பாயகலை பொலிஸார், சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

51 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

39 0 0
இலங்கை செய்திகள்

அநுர ஓர் அதிசயம்; தமிழ் தலைவர்கள் தரகர்கள்.!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29) கொழும்பில் ஊடகங்களுக்குக்…

32 0 0