உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

விசேட சுற்றிவளைப்பு: 296 பேர் அதிரடி கைது! – 1,400 பேருக்கு எதிராக வழக்கு

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 296 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ்மா அதிபரின் விசேட அறிவுறுத்தலின்படி, குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்தி, அனைத்து பொலிஸ் பிரிவுகளும் இணைந்து நேற்று செவ்வாய்க்கிழமை இந்த விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன.

இதன்போது மொத்தம் 22 ஆயிரத்து 195 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 7 பேர் அடையாளம் காணப்பட்டதுடன், நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 69 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 43 பேர் நேரடி பிடியாணை உத்தரவுக்கும், 26 பேர் திறந்த பிடியாணை உத்தரவுக்கும் உட்பட்டவர்களாவர்.

இதேவேளை, போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மதுபோதையில் வாகனம் செலுத்திய 104 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 27 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 1,451 பேருக்கு எதிராகத் தண்டப்பணம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும் இத்தகைய விசேட சுற்றிவளைப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

51 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

39 0 0
இலங்கை செய்திகள்

அநுர ஓர் அதிசயம்; தமிழ் தலைவர்கள் தரகர்கள்.!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29) கொழும்பில் ஊடகங்களுக்குக்…

32 0 0