உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

கோர விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
38 பார்வைகள்

வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியின் புத்தல, உனவட்டுன பகுதியில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த வானுடன் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற சாரதி பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரது மனைவியும், இரண்டு பிள்ளைகளும் படுகாயமடைந்த நிலையில் தற்போது புத்தல பிரதேச வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது.!

கொஸ்வத்தை – பொத்துவட்டவன பகுதியில் இருந்து பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் நேற்று…

78 1 0
இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

52 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

36 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

46 0 0