உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

இலங்கையில் தங்கவைக்கப்பட்டிருந்த ஈரான் கடற்படையினர் நாடு திரும்பினர்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
34 பார்வைகள்

இலங்கையின் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டிருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த மொத்தம் 240 வீரர்களும் நேற்று செவ்வாய்க்கிழமை (14) விசேட ஏற்பாடுகளின் கீழ் அவர்களது தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்ததாவது,
IRIS Dena என்ற கப்பல் இலங்கை கடற்பரப்புக்கு அருகில் வைத்து அமெரிக்க நீர்மூழ்கித் தாக்குதலுக்கு உள்ளானபோது அதிலிருந்து மீட்கப்பட்ட 32 ஈரானிய கடற்படை வீரர்களும், மேலும் IRIS Bushehr கப்பலில் இருந்த 204 மாலுமிகளும் இதில் அடங்குகின்றனர்.

காயமடைந்த நிலையில் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட இவர்கள் பின்னர் நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், மொத்தம் 236 ஈரானியர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (14) இரவு தாயகம் திரும்பியுள்ளனர்.

இவர்களை அழைத்துச் செல்ல Meraj Airlines நிறுவனத்திற்குச் சொந்தமான ‘Iran-09’ என்ற விசேட விமானம் பயன்படுத்தப்பட்டது.

இந்த விமானம் நேற்று மாலை சுமார் 4.00 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இலங்கை விமானப்படைத் தளத்தை வந்தடைந்தது.

பின்னர், வெலிசறை தடுப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 204 பேரும், கொக்கல தடுப்பு மையத்தில் இருந்த 32 பேரும் விமானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இதனையடுத்து, இந்த விசேட விமானம் இரவு 8.35 மணியளவில் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்டு, Iran நாட்டில் பெயர் வெளியிடப்படாத ஒரு விமான நிலையத்தை நோக்கி பயணித்தது.

இந்த நடவடிக்கை, சர்வதேச மனிதாபிமான மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது.!

கொஸ்வத்தை – பொத்துவட்டவன பகுதியில் இருந்து பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் நேற்று…

78 1 0
இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

52 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

36 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

46 0 0