உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

யாழில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறப்பு

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
31 பார்வைகள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் இன்று ஏப்ரல் 14 ஆம் திகதி யாழ்ப்பாணம்- உடுவில் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.

மக்களின் தேவைகளைப்பூர்த்தி செய்யும் வகையில் குறைகேள் அலுவலகமாக இது செயற்படவுள்ளது.

கட்சியின் அலுவலகத்தினை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் நாடாவை வெட்டித் திறந்து
இதன்போது சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் கடந்த பொது தேர்தலில் சரிவு ஏற்பட்டது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதற்கு நாம் பல காரணங்களைக் கூறினாலும் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்.

எமது அரசியல் இலக்கு என்ன என்பது ஒரே பாதையாக ஒரு சுயாட்சியை நோக்கி நகர்கின்றன கட்சியாக உள்ளது. இருப்பினும் கால ஓட்டத்தில் மக்களுக்கு தேவையான ஏனைய விடயங்கள் தொடர்பான தேவைகளையும் நாம் பூர்த்தி செய்ய வேண்டும்.
இதனை விட மக்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது வேலை வாய்ப்பு இல்லை என பலர் வெளிநாடு செல்கின்றனர். இளையவர்கள் வேலைவாய்ப்பு இல்லை என வெளிநாடு செல்கின்றனர்.

எமது அரசியல் இலக்குடன் இப்படியான விடயங்களினூடாகவும் நாம் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சீ.வி.கே. சிவஞானம் கருத்து தெரிவிக்கையில், மக்களின் குறைகளை கேட்கின்ற அலுவலமாக மாத்திரம் இல்லாது மக்களுக்கும் எமக்கும் தொடர்பு ஏற்படுத்தும் அலுவலகமாக இது செய்யப்படும்.
மக்களுக்கு தேவையான விடயங்களை ஒன்றிணைந்து கூட்டுணர்வுடன் செய்கின்ற ஒரு முறையிலே எமது எதிர்கால இலக்குகள் இருக்கின்றன.நமது கட்சியின் இலக்கும் அதுதான் எனவே அதை நோக்கி நாம் பயணிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம், கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், உடுவில் பிரதேசசபை உறுப்பினர் தி.பிரகாஸ், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.சயந்தன், ச.சுகிர்தன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

47 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

26 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

45 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” என்று…

64 0 0