உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை புதிய அரசியலமைப்பின் ஊடாக அடைய வேண்டும்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
44 பார்வைகள்

இந்த நாட்டிலே ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை புதிய அரசியலமைப்பின் ஊடாக அடைய வேண்டும் என்பதுதான் தமிழ் மக்களது பிரதானமான அபிலாசை. அதோடு தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த பல வன்முறைகளில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த இன அழிப்புக்கான பொறுப்புக் கூறல் சம்பந்தமான முன்னேற்றங்களை இந்த புத்தாண்டில் எதிர்பார்க்கின்றோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடியில் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“உலகமெங்கும் வாழும் அனைத்து தமிழ் பேசும் உறவுகளுக்கும் சிங்கள மக்களுக்கும் என்னுடைய இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

உண்மையிலேயே இந்த புத்தாண்டில் எமது விசேடமாக தமிழ் மக்களுடைய அபிலாசைகள் அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக் கொள்கின்றேன். மிக நீண்ட காலமாக இந்த நாட்டிலே தமிழ் மக்கள் ஒரு நிரந்தரமான தீர்வு ஒன்றினை சமாதான முறையில் வாழ்வதற்கான ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த விடயம் சம்பந்தமாக இலங்கை தமிழரசு கட்சியாகிய நாங்கள் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் சார்பிலே தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் தமிழ் மக்களின் பிரதான கட்சியாக இருக்கின்றது. அந்த வகையிலே இந்த வருடத்துக்குள்ளேயும் நாங்கள் எங்களுடைய மக்கள் சார்பிலே மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண வேண்டும் என்பதற்காக எங்களது கடமைகளை சரியாக செய்ய எதிர்பார்க்கின்றோம்.

குறிப்பாக இந்த நாட்டிலே ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை புதிய அரசியலமைப்பின் ஊடாக அடைய வேண்டும் என்பதுதான் எங்களது பிரதானமான அபிலாசை. அதோடு எங்களது பொறுப்பு கூறல் அதாவது தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த பல வன்முறைகளில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த இன அழிப்புக்கான பொறுப்புக் கூறல் சம்பந்தமான முன்னேற்றங்களை நாங்கள் காண வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.

அத்தோடு எமது பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறாமல் இருக்கும் மாகாண சபை தேர்தல் வடகிழக்கு மாகாணங்களில் நடைபெற வேண்டும். எங்களது மக்களின் நிலப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

இவ்வாறாக தமிழ் மக்கள் தொடர்ச்சியாக முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வுகள் இந்த ஆண்டுக்குள்ளே எட்டுவதற்கான முன்னேற்றகரமான நடவடிக்கைகள் நடைபெற வேண்டும் என்று நாங்கள் இறைவனை பிரார்த்திக்கின்றோம். விசேடமாக நாட்டிலே தற்போது பொருளாதாரத்தினால் மக்கள் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக அரசு ஊழியர்கள் அதாவது ஒரு குறிப்பிட்ட அளவு சம்பளத்துடன் ஒவ்வொரு மாதமும் உழைப்பவர்களுக்கு இந்த பொருளாதார நெருக்கடிகள் மிகவும் கஷ்டமாக இருக்கின்றது. இது சம்பந்தமாக நாங்களும் எங்களது கரிசனைகளை வெளிப்படுத்தியிருக்கிறோம்.

அதேபோலதான் அரசாங்கத்தினுடைய இலவசமாக கொடுக்கும் கொடுப்பனவுகளும் கூட அஸ்வெசும பயனாளிகளுக்கு மாத்திரம் கிடைப்பது சம்பந்தமாகவும் எமது கவனத்தை செலுத்தியிருக்கிறோம். அத்தோடு இந்த அஸ்வெசும பயனாளிகளின் தெரிவுகள் மூலம் கிடைக்க வேண்டியவர்களுக்கு கொடுப்பனவுகள் கிடைக்கின்றதா என்ற கேள்விகள் இருக்கின்றது. இருந்தபோதிலும் இந்த நாளிலே எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் நாங்கள் அனைவரும் ஒரு சுபீட்சமான நல்லதொரு எதிர்காலத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் வாழ்த்தி எனது வாழ்த்து செய்தியை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

50 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

27 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

45 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” என்று…

64 0 0