உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்த, இலங்கையர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (14) அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் சிலாபம், மாரவில பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய வர்த்தகர் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று அதிகாலை 12.52 மணியளவில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-648 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவர் கொண்டு வந்த 04 பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 46 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் உற்பத்தியான ‘மென்செஸ்டர்’ ரகத்தைச் சேர்ந்த 31,000 சிகரெட்டுகள் அடங்கிய 155 கார்ட்டூன் சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், இது தொடர்பில் விசாரணைகளில் ஈடுபட்ட அதிகாரிகள், சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட அனைத்து சிகரெட்டுகளையும் அரசுடைமையாக்கியதுடன், குறித்த நபருக்கு 155,000 ரூபா அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

0 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

26 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

45 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” என்று…

64 0 0