உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
31 பார்வைகள்

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த ‘குஷ்’ போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவரை சுங்கப் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 24 வயதுடைய இந்தியப் பிரஜை என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இந்த போதைப்பொருள் தொகுதியை தாய்லாந்தின் பெங்கொக் நகரில் கொள்வனவு செய்து, பின்னர் மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்குச் சென்று, அங்கிருந்து மலேசிய ஏர்லைன்ஸின் MH-179 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவர் கொண்டு வந்த பயணப் பையினுள் இருந்த அட்டைப் பெட்டியின் பக்கச்சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த நிலையில், சுமார் 2 கோடியே 8 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான 02 கிலோ 87 கிராம் எடையுள்ள ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பயணி மற்றும் போதைப்பொருள் தொகுதி கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

47 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

26 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

45 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” என்று…

64 0 0