உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பத்து இந்திய மீனவர்கள் மன்னாரில் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
25 பார்வைகள்

மன்னாருக்கு வடக்கே இலங்கை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 10 இந்திய மீனவர்களை ஒரு படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் பிடிபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மன்னாருக்கு வடக்கே இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து பல இந்திய மீன்பிடிப் படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவதை வடமத்திய கடற்படை கட்டளையினர் கண்காணித்துள்ளனர். இதனையடுத்து, அந்தப் படகுகளை இலங்கை எல்லைக்கு அப்பால் விரட்டியடிப்பதற்காகக் கடற்படை கப்பல்கள் மூலம் விசேட நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, ஏனைய படகுகள் தப்பிச் சென்ற நிலையில், தொடர்ந்து இலங்கை எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஒரு படகைக் கடற்படையினர் சுற்றிவளைத்தனர். அதிலிருந்த 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களது மீன்பிடிப் படகும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும், பறிமுதல் செய்யப்பட்ட படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கிளிநொச்சி மாவட்ட மீன்வளப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

சீமானுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய விஜயலட்சுமி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னதாக, சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்திருந்த…

72 0 0
இந்திய செய்திகள்

குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தவில்லை – உயர்நீதிமன்றத்தில் தவெக விளக்கம்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கில், குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என விஜய்…

40 0 0
இந்திய செய்திகள்

தவெக கூட்டணிக்குள் உட்கட்சிப்பூசல்?

தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியை ‘தேசிய வெற்றி கழகம்’ என மாற்றி 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தத்…

92 0 0
இந்திய செய்திகள்

திருமாவளவனின் அறிவிப்பு : கண்டுகொள்ளாத விஜய்!

உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில், தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிவிப்புக்கு விஜய் பதில் கூறாமை தமிழக அரசியலில் பேசு பொருளாகியுள்ளது. தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்ந்து…

65 0 0