உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பிரஜாசக்தி நிகழ்ச்சித் திட்டம்; 30 பயனாளிகளுக்கு முதற்கட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
23 பார்வைகள்

“தமக்கான ஓர் இடம் அழகான வாழ்க்கை” எனும் அரசின் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, சாய்ந்தமருது மற்றும் காரைதீவு ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பயனாளிகளுக்கான
(10 இலட்சம் பெறுமதியான) வீடுகளுக்கான முதற்கட்ட காசோலையான 150,000/- பெறுமதியான காசோலைகள்
வழங்கி வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நேற்று (06) நடைபெற்றது.

இந் நிகழ்வில், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் கரையோரப் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக், தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான், தேசிய மக்கள் சக்தியின் மருதமுனை அமைப்பாளர் தோழர் றினாஸ், மாவடிப்பள்ளி அமைப்பாளர் தோழர் சப்றூஸ், நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் எஸ்.இம்தியாஸ், இணைப்புச் செயலாளர் ஆசிரியர் எஸ்.எம்.ஆரிப், பிரஜாசக்தியின் தவிசாளர்கள் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

83 0 0
அம்பாறை செய்திகள்

மாணவ, மாணவிகளிடம் அங்க சேட்டை; பொதுச் சுகாதார பரிசோதகரை கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு.!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI)…

84 0 0
அம்பாறை செய்திகள்

போதைப்பொருளுடன் கைதான ஸ்பைடர் வுமன்.!

போதைப்பொருட்களை மிக நீண்ட காலமாக கடத்தி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) கால் உடைந்த நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

131 0 0
அம்பாறை செய்திகள்

பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது.!

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

98 0 0