உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

இரத்தினக்கல் வர்த்தகர் கொ*லை; சந்தேகநபர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
39 பார்வைகள்

கஹவத்தை பகுதியில் 61 வயதுடைய இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் கஹவத்தை கந்த பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பல விசேட பொலிஸ் குழுக்களால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர், டெல்வல பொலிஸ் உத்தியோகத்தர்களால் வனப்பகுதி ஒன்றில் ஒளிந்திருந்த நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தகர் காணாமல் போயுள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, வர்த்தகர் காணாமல் போவதற்கு முன்னர் கடந்த சனிக்கிழமை (28) அவர் கஹவத்தை-நீலகம வீதியில் உந்துருளியில் பயணித்துள்ளமை தெரியவந்தது.

அவரது உந்துருளி பின்னர் அதே வீதியின் வளைவு ஒன்றிற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதுடன், அவரது கைபேசி அருகில் இருந்த தேயிலைத் தோட்டம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் மூலம், கடந்த திங்கட்கிழமை (30) வர்த்தகரின் சடலம் சுரங்கக் குழி ஒன்றிலிருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

55 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

68 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

24 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

47 0 0