உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
34 பார்வைகள்

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (31) நள்ளிரவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உள்ளிட்ட மொத்தம் 281,810 பேர் தோற்றியிருந்தனர். இவர்களில் 176,527 மாணவர்கள், அதாவது 62.64% பேர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சார்த்திகள் தங்களது பெறுபேறுகளை Doenets.lk மற்றும் Results.exams.gov.lk ஆகிய இணையதளங்கள் மூலம் பார்வையிட முடியும்.

மேலும், இன்று (01.04.2026) முதல், மாணவர்கள் தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தி onlineexams.gov.lk இணையதளத்தின் மூலம் பெறுபேற்று அட்டவணைகளை தரவிறக்கம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம், அதிபர்கள் மற்றும் வலய/மாகாண கல்வி அதிகாரிகளும் தமக்கு வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் மூலம் பெறுபேறுகளைப் பதிவிறக்கம் செய்ய முடியும்.

இதேவேளை, பல்வேறு காரணங்களுக்காக 111 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகளின் மீளாய்வுக்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், 06.04.2026 முதல் 22.04.2026 வரை ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீளாய்வு முடிவுகள் வெளியான பின்னரே பாடசாலைகளுக்கான அச்சிடப்பட்ட பெறுபேற்று அட்டவணைகள் அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு 1911 என்ற நேரடி அழைப்பு இலக்கம் அல்லது 0112784208, 0112786616, 0112784537, 0112785413 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் தொடர்புகொள்ளலாம்.

மேலும் 0112784422 என்ற தொலைநகல் இலக்கம் மற்றும் gcealexam@gmail.com மின்னஞ்சல் வழியாகவும் விசாரணைகள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

56 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

68 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

24 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

47 0 0