உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

காணி அளவீடு செய்வதற்கு எதிரான போராட்டத்திற்கு த. தே. ம. மு பூரண ஆதரவு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
47 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகாவில் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை இராணுவப் பயன்பாட்டிற்காக அளவீடு செய்யும் நடவடிக்கைக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தத் தீர்மானித்துள்ளனர்.


எதிர்வரும் 02ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த அளவீட்டின் மூலம், கடந்த 17 ஆண்டுகளாக அப்பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் 4ஆம் பட்டாலியன் மின் மற்றும் இயந்திரவியல் பிரிவுக்காக காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


இந்த நடவடிக்கை மக்களின் விருப்பத்திற்கு மாறானதாக இருப்பதாகவும், தங்கள் உரிமைகளை பாதுகாக்க போராட்டம் அவசியம் எனவும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்த போராட்டத்திற்கு பூரண ஆதரவை அறிவித்துள்ளதுடன்சமூக ஆர்வலர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.


மேலும், பொதுமக்களின் காணிகளை இராணுவத்திற்காக வழங்க முடியாது என்றும், சம்பந்தப்பட்ட படைகள் அப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் அந்தக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

56 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

68 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

24 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

47 0 0